காமன்வெல்த்: மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் நவீன் பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்

காமன்வெல்த்தின் மல்யுத்த போட்டியில் 6-வது தங்கபதக்கத்தை இந்திய வீரர் நவீன் வென்று அசத்தி உள்ளார்.
காமன்வெல்த்: மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் நவீன் பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 11 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 33 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான (74 கிலோ) எடை பிரிவில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நவீன் பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய நவீன் முகமது ஷெரீப் தாஹிரை 9-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவின் 6-வது தங்கப்பதக்கத்தை கைபற்றினார். பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, வினேஷ் போகட் மற்றும் ரவி குமார் தஹியா ஆகியோர் மல்யுத்தத்தில் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

இந்தப்பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com