காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் : இந்தியா - பார்படோஸ் அணிகள் இன்று மோதல்

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதுகிறது.
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் : இந்தியா - பார்படோஸ் அணிகள் இன்று மோதல்
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதுகிறது.

தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்த இந்தியா ,2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.இதனால் இன்றைய ஆட்டத்தில் தொடர் வெற்றி முனைப்பில் இந்திய அணி களம் இறங்க உள்ளது.இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com