காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி: அரையிறுதியில் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
Image Courtesy : AFP  
Image Courtesy : AFP  
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 16 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை வென்றுள்ளது.

10-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் மகளிர் ஆக்கி போட்டியில் வெண்கலம், ஈட்டி எறிதலில் வெண்கலம் மும்முறை தாண்டுதலில் 2 பதக்கம் என இந்திய வீரர் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். இன்று நடந்த அரையிறுதி போட்டியில் அவர் மலேசியாவின் இங் யோங் டிஸேவுக்கு எதிராக விளையாடினார்.

இந்த போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-13, 19-21, 10-21 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் அவர் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com