காமன்வெல்த் குத்துச்சண்டையில் அசத்தும் இந்தியா: நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை

இன்று மட்டும் குத்துச்சண்டையில் இந்தியா 3-வது தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.
காமன்வெல்த் குத்துச்சண்டையில் அசத்தும் இந்தியா: நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 16 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை வென்றுள்ளது.

10-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் மகளிர் ஆக்கி போட்டியில் வெண்கலம், ஈட்டி எறிதலில் வெண்கலம் மும்முறை தாண்டுதலில் 2 பதக்கம் என இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதி போட்டியில் வடக்கு அயர்லாந்தின் கார்லி எம்சி நௌலை இன்று எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.

இதன் மூலம் இன்று மட்டும் குத்துச்சண்டையில் இந்தியா 3-வது தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com