பர்மிங்காம் : காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றம்

தொடக்க விழாவுக்கு முன்னதாக காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் இந்தியக் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
Image Courtesy : ANI  
Image Courtesy : ANI  
Published on

பர்மிங்காம்,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இன்று தொடக்க விழா முடிந்த பிறகு நாளை முதல் விளையாட்டு போட்டிகள் தொடங்குகின்றன. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது.

இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.

இந்த நிலையில் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவை முன்னிட்டு பர்மிங்காமில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் இந்தியக் தேசியக் கொடி இன்று ஏற்றப்பட்டது. பர்மிங்காமில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில், ஹாக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் உட்பட பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

காமன்வெல்த் தொடக்க விழா இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com