காமன்வெல்த் மல்யுத்தம் : பஜ்ரங் புனியா தங்கம் வென்றார் - இந்தியாவுக்கு 7-வது தங்கப் பதக்கம்

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வெல்லும் 7-வது தங்க பதக்கம் இதுவாகும்.
Image Courtesy : Twitter @Media_SAI
Image Courtesy : Twitter @Media_SAI
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றுள்ளது.

8-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்றன.

இதில் முன்னதாக நடைபெற்ற காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் இந்தியாவின் தீபக் புனியா (ஆண்கள் 86 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு ), சாக்சி மாலிக் (பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு), அன்ஷு மாலிக் (பெண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு) மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

இறுதி போட்டிக்குள் நுழைந்து 4 போட்டியாளர்களும் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை ஏற்கனவே உறுதி செய்து இருந்தனர். இதை தொடர்ந்து இறுதி போட்டிகள் நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

இதை தொடர்ந்து ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் புனியா கனடா வீரர் மெக்நீல் உடன் மோதினார். இந்த போட்டியில் பஜ்ரங் 9-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வெல்லும் 7-வது தங்க பதக்கம் இதுவாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com