திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி

இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 68 ஆயிரத்து 445 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 383 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 79 லட்சம் ஆகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com