

சென்னை,
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:-
இந்த சட்டசபை தேர்தல் டெல்லி அணியும் தமிழ்நாடு அணிக்கும் இடையேயான போட்டி. எங்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. நான்காவது முறையும் என்னை வெற்றி பெற வைப்பார்கள்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பார்கள். 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது ” என்றார். இந்த முறை பிரசாரம் எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் எப்போழுதும் போல வலுவான பிரச்சாரமாக இருக்கும்” என்றார்.