உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண வருபவர்களை உற்சாகப்படுத்தி வரும் 'ரசிகர்கள் திருவிழா'

கால்பந்து திருவிழாவிற்கு மத்தியில் மைதானத்திற்கு வெளியே நடைபெறும் ‘ரசிகர்கள் திருவிழா’ கத்தார் வருபவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண வருபவர்களை உற்சாகப்படுத்தி வரும் 'ரசிகர்கள் திருவிழா'
Published on

தோகா,

22-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இந்த போட்டியை நடத்துவதற்காக கத்தார் அரசு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட மைதானங்களை அமைத்துள்ளது. உலகக் கோப்பை மட்டுமல்லாது எதிர்காலத்தில் கத்தார் அரசின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த போட்டியை அந்நாட்டு அரசு நடத்தி வருகிறது.

அந்த வகையில் சர்வதேச நாடுகளில் இருந்து உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக, அவர்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பம்சங்கள் கத்தாரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாக கால்பந்து மைதானத்திற்கு வெளியே நடைபெறும் 'ரசிகர்கள் திருவிழா' அமைந்துள்ளது.

கால்பந்து போட்டியைக் காண வருபவர்களை 'ரசிகர்கள் திருவிழா' உற்சாகப்படுத்தி வருகிறது. இதில் புகழ் பெற்ற கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் பிபா அருங்காட்சியகத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது.

மைதானங்களுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள பெரிய திரைகள் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதோடு, அதிகமான மக்கள் கூடும் இடமாகவும் மாறியுள்ளது. அதே போல் தாங்கள் ஆதரிக்கும் அணிகளின் ஆடைகளை ரசிகர்கள் எளிதாக வாங்கும் வகையில் பிரத்யேகமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கால்பந்து திருவிழாவிற்கு மத்தியில் மைதானத்திற்கு வெளியே நடைபெறும் 'ரசிகர்கள் திருவிழா' கத்தார் வருபவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com