உலகக்கோப்பை கால்பந்து : டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
உலகக்கோப்பை கால்பந்து : டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி
Published on

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று இரவு தோகாவில் உள்ள அல்ஜனூப் ஸ்டேடியத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் மேத்யூ லேக்கீ தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.

இதனை சமன் செய்வதற்காக டென்மார்க் அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து டென்மார்க் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com