உலகக்கோப்பை கால்பந்து: மரடோனாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்சி

உலகக்கோப்பையில் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் சாதனையை மெஸ்சி முறியடித்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து: மரடோனாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்சி
Published on

தோகா,

கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார். கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கேல் அடித்தார்.

இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அடித்துள்ள நிலையில், மரடோனாவின் சாதனையையும் முறியடித்தார். உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com