உலகக் கோப்பை கால்பந்து - கத்தார் சென்றடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்...!

உலக கோப்பை கால்பந்து போட்டி முதலாவது ஆட்டத்தில் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து - கத்தார் சென்றடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்...!
Published on

தோகா,

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. கால்பந்து ரசிகர்களை கட்டிபோடப்போகும் இந்த திருவிழா டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் அரங்கேறுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று கத்தார் வந்தடைந்தனர். தோகா விமானம் நிலையம் வந்த அவர்களை அந்நாட்டு அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவைப் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

தொடக்க லீக் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னதாக போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் தென்கொரியாவை சேர்ந்த பி.டி.எஸ். இசைக்குழுவினரின் ஆட்டம் பாட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com