பாகிஸ்தான் வீரருக்கு கிடைத்த கவுரவம்: சாதனை எண்ணிலேயே கார் பரிசு

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு அவர் ஈட்டி எறிந்த தூரத்தையே காரின் பதிவு எண்ணாக வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் வீரருக்கு கிடைத்த கவுரவம்: சாதனை எண்ணிலேயே கார் பரிசு
Published on

லாகூர்,

ஈட்டி எறிதல் போட்டியில் 92.97மீ எறிந்து 27 வயதான நதீம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தான் வீரர் என்ற வரலாற்று பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு பஞ்சாப் முதல்-மந்திரி மரியம் நவாஸ், ஹோண்டா சிவிக் காரை பரிசாக அளித்துள்ளார்.

'தங்க மகன்' அர்ஷத் நதீமுக்கு அவரது சொந்த ஊரான மியான் சன்னுவில் நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி மரியம் நவாஸ் ஷெரிப் ஏற்கனவே அறிவித்தபடி அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார். மேலும் அவருக்கு சொகுசு கார் ஒன்றையும் பரிசாக அளித்தார். ஒலிம்பிக் போட்டியில் நதீம் ஈட்டி எறிந்த சாதனை தூரமான 92.97 என்பதையே அவருக்குரிய காரின் பதிவு எண்ணாக நம்பர் பிளேட்டில் பொறிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்கிய நீரஜ் சோப்ராவை தோற்கடித்து மகுடம் சூடிய நதீமுக்கு பாகிஸ்தானில் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு பரிசுகளும் குவிந்தன. அரசு மற்றும் நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ.10 கோடி வரை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com