தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 350 பேர் வேட்பு மனு தாக்கல்

தற்போது வரை தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 350 பேர் வேட்பு மனு தாக்கல்
Published on

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 20-ந்தேதி முதல் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 350 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம், தற்போது வரை தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளையுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com