தோல்வி பயத்தால் மோடி நாகரிகமற்ற முறையில் பேசுகிறார் - செல்வப்பெருந்தகை

100 இடங்களில்கூட பா.ஜனதா வெற்றி பெறாது என வடநாடு பத்திரிகையாளர்கள் தெரிவிப்பதாக செல்வப்பெருந்தகை கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

வயநாடு தொகுதியில் கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறார்.

மோடி மக்களை பிரித்தாளும் கொள்கையில் இறங்கி இருக்கிறார். 100 இடங்களில்கூட பா.ஜனதா வெற்றி பெறாது என வடநாடு பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். தோல்வி பயத்தால் கலவரத்தை ஏற்படுத்தவும், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும் மோடி இதுபோல் நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. ஆனால் மோடி, அமலாக்க துறை, சி.பி.ஐ., வருமான வரி, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை நம்பி தேர்தலில் நிற்கிறார். இதனால் மோடி மீது எந்தவித நடவடிக்கை இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com