என் மனைவி தீவிர ராம பக்தை - ஆ.ராசா பேச்சு

என் மனைவி வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருப்பார் என்று தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா கூறினார்.
என் மனைவி தீவிர ராம பக்தை - ஆ.ராசா பேச்சு
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூரில், தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பா.ஜனதா ஆட்சியில் அனைத்து இடங்களிலும் ஊழல் உள்ளது. பங்குசந்தை உள்பட அனைத்து இடங்களிலும் ஊழல் செய்துவிட்டு, நான் தான் விஸ்வகுரு, உலகத்தின் தலைவர் என சொல்கிறார்கள். என் மனைவி தீவிர ராம பக்தை. அவர் சனிக்கிழமை ராமருக்காவும், வியாழக்கிழமை எனக்காகவும், திங்கட்கிழமை சிவனுக்காகவும் என வாரம் 3 நாட்கள் விரதம் இருப்பார்.

வீட்டில் பூஜை அறை இருந்தாலும் ஒருநாள் கூட நான் உள்ளே சென்றது இல்லை. எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை வழிபடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆன்மிகமும், பக்தியும் தனிமனித தேவைக்காகவே. என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம்தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com