டி.வி. முன் மோடி தோன்றினாலே மக்கள் அலறியதுதான் பிரதமரின் ஒரே சாதனை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
டி.வி. முன் மோடி தோன்றினாலே மக்கள் அலறியதுதான் பிரதமரின் ஒரே சாதனை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

டி.வி. முன், மோடி தோன்றினாலே மக்கள் அலறியதுதான் பிரதமரின் ஒரே சாதனை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இரவில் டி.வி. முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை!

பிரதமராகத் தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும் தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார்.

ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார் கூறி வாக்கு சேகரிக்கும் மலிவான செயல் இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாதது..!

அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா, RSS சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா என்பதை முடிவுசெய்யும் தேர்தல் இது. இந்தியாவில் மதநல்லிணக்கம் நீடிக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கவும் " என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com