பிரித்து பேசுவதா.... ரெஜினா வருத்தம்

கண்டநாள் முதல், ராஜதந்திரம், மாநகரம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா, இந்தி திரையுலகினரை பற்றி பேட்டியளித்துள்ளார்.
பிரித்து பேசுவதா.... ரெஜினா வருத்தம்
Published on

தமிழில், கண்டநாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரெஜினா காசன்ட்ரா. தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இந்தி திரையுலகினர் தென்னிந்திய நடிகர்களை பிரித்து பேசுவதாக சாடி உள்ளார்.

இதுகுறித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில், இந்தி திரையுலகுக்கு தமிழ், தெலுங்கில் இருந்து வரும் நடிகர், நடிகைகளை தென்னிந்திய நடிகர்கள் என்று அழைக்கும் நிலைமை உள்ளது. இப்படி நடிகர்களை பிரித்து பார்ப்பது வருத்தமாக உள்ளது. அங்குள்ள பலரும் தென்னிந்திய நடிகர்கள் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பதை கேட்க முடிகிறது. அப்படி பேசாதீர்கள் என்று அவர்களை கண்டிக்கவும் தோன்றுகிறது.

தென்னிந்திய நடிகர்கள் என்ற முத்திரை இல்லாமல் நடிகர், நடிகைகள் என்று அவர்கள் அழைக்க வேண்டும். இவர்களால் தென்னிந்திய நடிகர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் படங்கள், தற்போது அனைத்து மொழிகளிலும் வெளியாகி வருகிறது. எனவே, அடுத்த சில வருடங்களில், தென்னிந்திய நடிகர்கள், இந்தி நடிகர்கள் என்று பிரித்து பார்க்கும் நிலைமை இருக்காது என்று நினைக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com