

சென்னை,
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது 100-வது முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளதை முன்னிட்டு, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் சென்னையில் இன்று கவுரவிக்கப்பட்டார்.
சென்னையில் நடைபெறும் துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டலம் – தெற்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் களமிறங்குவதன் மூலம் ஷமி தனது 100-வது முதல் தரப் போட்டியை நிறைவு செய்கிறார்.
ஷமி இதுவரை 99 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.அந்தப் போட்டிகளில் 382 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
துலீப் கோப்பை அரையிறுதியில் மத்திய மண்டலத்துக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, கிழக்கு மண்டலம் இறுதிப்போட்டிக்கு வருவதில் முக்கிய பங்காற்றினார்.
ஷமிக்கு சிறப்பு நினைவுப் பரிசு, 100 என்ற எண்ணுடன் கூடிய சிறப்பு சட்டை மற்றும் கையெழுத்திடப்பட்ட கிரிக்கெட் பந்து ஆகியவற்றை வழங்கி கௌரவித்தது. கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் உள்ளிட்ட அணியினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.