

சென்னை,
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2020ல் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்த தோனி, நேற்று அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், தான் விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், 19 ஆண்டுகால ஐபிஎல் பயணத்தில் அவர் மொத்தமாக ரூ.200 கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளார். இதைத் தாண்டி விளம்பரம், பிராண்ட் அம்பாசிட்டர்ஒப் பந்தம் என பல வகையில் சம்பாதித்துள்ளார். கடந்த 2 சீசனாக அன் கேப்பிடு வீரராக தலா 4 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளார். ஒரு சீசனில் மட்டும் அதிகபட்சமாக ரூ.15 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.