

சென்னை,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியே கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் அணி கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ள இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச உள்ளது.
ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும். அதே வேளை சொந்த மண்ணில் டி20 தொடரையும் வெல்ல வேண்டும் என்று வங்களதேசம் களமிறங்கும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.