

டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியே கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் அணி கைப்பற்றியது
இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் வங்காளதேச அணி 19 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜம்பா, ஜோயல் டேவிஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.