

லக்னோ,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த அந்த அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.