20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் லோகேஷ் ராகுல் முன்னேற்றம்

20 ஓவர் சர்வதேச போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் லோகேஷ் ராகுல் முன்னேற்றம்
Published on

துபாய்,

20 ஓவர் சர்வதேச போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 7-வது இடத்திலும் நீடிக்கின்றனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் முதலிடத்தில் தொடருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி 3 இடங்கள் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com