2024 டி20 உலகக்கோப்பை: அப்ரிடிக்கு பதிலாக மீண்டும் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்..?

2024 டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
image courtesy;AFP
image courtesy;AFP
Published on: 

கராச்சி,

2024 டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதுவரை 8 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) அணிகள் தலா 2 முறையும், இந்தியா (2007), பாகிஸ்தான் (2009) இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) அணிகள் தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

9-வது டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் செயல்பட உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் பாபர் அசாம் 3 வடிவிலான கேப்டன் பதவியில் இருந்தும் விலகி இருந்தார். அவருக்கு பதிலாக டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனாக ஷாகின் அப்ரிடி நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரை நீக்கி மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக செய்ல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com