ரோஹித், கோலிக்கு வயது ஒரு தடையல்ல...2027 உலகக்கோப்பை குறித்து பிசிசிஐ தலைவர் அதிரடி கருத்து

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறவுள்ளது.
ரோஹித், கோலிக்கு வயது ஒரு தடையல்ல...2027 உலகக்கோப்பை குறித்து பிசிசிஐ தலைவர் அதிரடி கருத்து
Published on: 

2027-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இருவரின் உலகக்கோப்பை வாய்ப்பு குறித்து பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

வயது முக்கியமல்ல; உடற்தகுதியும் செயல்பாடும்தான் முக்கியம்!

2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறுவது குறித்து பேசிய மிதுன் மன்ஹாஸ், வீரர்களின் வயதை அடிப்படையாக வைத்து அவர்களைத் தேர்வு செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு வீரர் தொடர்ந்து நல்ல உடற்தகுதியுடன் இருந்து, சிறப்பாகச் செயல்பட்டு, நாட்டுக்காகப் போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தருகிறார் என்றால், அவரைத் தேர்வு செய்வதற்கு அதுவே முக்கியமான தகுதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2027 உலகக்கோப்பையின்போது ரோஹித், கோலியின் வயது என்ன?

அப்போது ரோஹித் சர்மா 40 வயதை எட்டியிருப்பார். விராட் கோலிக்கு 38 வயதாக இருக்கும். இதனால், அடுத்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருவரும் இடம்பெறுவார்களா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

இருவரும் 2024-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். தொடர்ந்து, 2025-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தனர். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com