2027 ஐபிஎல் - பாண்டியா பஞ்சாபுக்கு... அர்ஷ்தீப் மும்பைக்கு... மீண்டும் கேப்டனாகும் ரோஹித்?

ரோஹித் சர்மா மீண்டும் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஷ்தீப் சிங்
Published on: 

மும்பை,

மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாற உள்ளதாக வெளியான தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

ஹர்திக் - அர்ஷ்தீப் ஒப்பந்தம்

2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அணிகளின் வீரர்கள் தொடர்பான டிரேட் பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியானது.

இவரை டிரேட் செய்யப் பல அணிகள் மும்முரம் காட்டின. சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் மும்பை அணியிடம் டிரேட் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் அணி டிரேட் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாற உள்ளதாக வெளியான தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இந்த டிரேட் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு வீரர்களும் கையெழுத்திட்டுள்ளதாகவும், பிசிசிஐ தரப்பிலிருந்து முறையான ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு அணிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் இரு அணிகள் தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியில் ஹர்திக்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து நீடிப்பார் எனக் கூறப்படுகிறது. இதனால் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்காமல், ஒரு வீரராக மட்டுமே அணியில் விளையாடச் சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாகிறாரா?

ஹர்திக் பாண்டியா மும்பை அணியிலிருந்து வெளியேறுவதால், அந்த அணியின் கேப்டன் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அனுபவ வீரர் ரோஹித் சர்மா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுகுறித்து அணி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

X