2027 உலகக் கோப்பை: வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கோரிக்கை

ஐசிசி சில மாற்றங்களை செய்துள்ளது.
2027 உலகக் கோப்பை: வீரர்களின் எண்ணிக்கையை  உயர்த்த ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கோரிக்கை
Published on

மும்பை,

50 ஓவர் ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற இருக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பையில் ஐசிசி சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் ஐசிசி-யின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

2027-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் சீரிஸ் சுற்று, சூப்பர்7 சுற்று என புதிய வடிவத்தில் நடைபெறுவதால் முன்பை விட அதிகமான ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும்.

எனவே அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கையை 15-ல் இருந்து 17 ஆக உயர்த்த ஐ.சி.சி. அனுமதிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு வலியுறுத்தியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com