20 ஓவர் கிரிக்கெட்: திருவள்ளூர் அணி 3-வது வெற்றி

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், திருவள்ளூர் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
20 ஓவர் கிரிக்கெட்: திருவள்ளூர் அணி 3-வது வெற்றி
Published on

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தேனியில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் திருவள்ளூர்-தேனி மாவட்ட அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆகாஷ் சும்ரா 60 ரன்னும், ராம் அரவிந்த் 49 ரன்னும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தேனி அணி 19.2 ஓவர்களில் 88 ரன்னில் சுருண்டது. இதனால் திருவள்ளூர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருவள்ளூர் அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சேலம் அணி சூப்பர் ஓவரில் தஞ்சாவூரையும், திருவாரூர் அணி சூப்பர் ஓவரில் ராமநாதபுரத்தையும் வீழ்த்தின. மற்ற ஆட்டங்களில் காஞ்சீபுரம், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், கோவை, நாகப்பட்டினம், தூத்துக்குடி அணிகள் வெற்றி பெற்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com