

புதுச்சேரி,
2-வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணிக்கு 276 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா ஏ.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் 2-வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டி இன்று புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, 49.5 ஓவர்களில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியா ஏ அணியில் சாம் கான்ஸ்டாஸ் 67 ரன்களும், ஜோஷ் பிலிப் 58 ரன்களும் எடுத்தனர். நாதன் மெக்ஸ்வீனி 32 ரன்களும், மிட்செல் ஓவன் 25 ரன்களும் சேர்த்தனர். இந்தியா ஏ அணி தரப்பில் அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இஅல்க்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கி உள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றது. இதனால், 2-வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா ஏ அணி களமிறங்கி உள்ளது.