2-வது ஒருநாள் போட்டி: இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
image courtesy:twitter/@OfficialSLC
image courtesy:twitter/@OfficialSLC
Published on

கொழும்பு,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

அதன்படி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடக்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹதி ஹசன் மிராஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இலங்கை முதலில் பந்து வீசுகிறது.

வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பர்வேஸ் ஹொசைன் எமோன் மற்றும் தன்சித் ஹசன் தமின் களமிறங்கியுள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com