

வதோதரா,
இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டி யில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே பெண்கள் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மந்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.