மழையால் 2-வது ஒருநாள் போட்டி நிறுத்தம் - இந்தியா வெற்றி பெற இன்னும் 22 ரன்கள் தேவை

கே.எல்.ராகுல் 26 ரன்களுடனும், ஆக்கிப் நபி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஒருநாள் கிரிக்கெட்
Published on: 

வெலிங்டன்,

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

134 ரன்களில் சுருட்டிய இந்தியா

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாகப் போட்டி 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டநிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் டேரில் மிட்செல் 55 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 31 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் குர்நூர் பிரார் 10 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மழையால் ஆட்டம் நிறுத்தம்

இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி, 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

கே.எல்.ராகுல் 26 ரன்களுடனும், ஆக்கிப் நபி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 22 ரன்கள் தேவைப்படுகிறது.

X