ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20: வங்காளதேச முன்னணி வீரர் விலகல்..?

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @BCBtigers
Image Courtesy: @BCBtigers
Published on: 

சார்ஜா,

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வங்காளதேசம் முயற்சிக்கும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் கடுமையாக போராடும்.

இந்நிலையில், வங்காளதேச அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் முன்னணி வீரரான தவ்ஹித் ஹ்ரிடோய் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com