2வது டி20: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
2வது டி20: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
Published on

லண்டன்,

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

இங்கிலாந்து - இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.

2வது டி20

இந்நிலையில், இங்கிலாந்து, இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இலங்கை 145 ரன்கள்

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்கா அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் லியாம் டாசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து வெற்றி

இதனை தொடர்ந்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 12.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. அந்த அணியின் டாம் பண்டான் அதிகபட்சமாக 52 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com