இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 : டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்
இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 : டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
Published on

புனே,

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி இலங்கை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com