2வது டி20: பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது
Image Courtesy: @BCBtigers
Image Courtesy: @BCBtigers
Published on

டாக்கா,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வங்காளதேசம் முனைப்பு காட்டும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க வெற்றிக்காக பாகிஸ்தான் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com