2வது டி20: இலங்கை - இங்கிலாந்து இன்று மோதல்

இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.


2வது டி20: இலங்கை - இங்கிலாந்து இன்று மோதல்
Published on

பல்லேகலே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இங்கிலாந்து முனைப்பு காட்டும். அதேவேளை தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி முயற்சிக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com