2வது டி20: ஜிம்பாப்வே - நமீபியா அணிகள் இன்று மோதல்

நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
Image Courtesy: @ZimCricketv
Image Courtesy: @ZimCricketv
Published on

புலவாயோ,

நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற ஜிம்பாப்வே முனைப்பு காட்டும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்த்ல் வெற்றிக்காக நமீபியா கடுமையாக போராடும்.

இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 5.00 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com