2-வது டி20 - ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்தியா
Published on: 

ராய்ப்பூர்,

2-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா - ஜிம்பாப்வே

இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்து வருகிறது.

2-வது போட்டி

இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது.

அதிரடி

தொடர்ந்து 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு, தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா , ஷபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்தனர்.

இருவரும் நாலாபுறமும் ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்தனர். அப்போது ஷபாலி வர்மா 25 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

வெற்றி

இறுதியில் இந்திய அணி 8.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தும் அனுஷ்கா சர்மா 1(4) ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

தொடரை கைப்பற்றியது

ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தநிலையில், தற்போது 2-வது போட்டியிலும் வெற்றி பெற்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com