இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 2 இலங்கை வீரர்கள் விலகல்

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 2 இலங்கை வீரர்கள் விலகல்
Published on

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். குஷால் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தொடக்க வீரர் பதும் நிஷங்காவும் காயத்தால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வீரர்கள் காயத்தால் அடுத்தடுத்து அவதிப்பட்டு வருவது இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com