இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 2-வது சதத்தை பதிவு செய்த துருவ் ஜுரெல்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் தனது 2-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.
Published on

கொழும்பு,

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரெல் தனது 2-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

தொடரில் இந்தியா ஆதிக்கம்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து, இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாளில் தொடர்ந்த இந்தியாவின் ஆதிக்கம்

2-வது நாள் ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. 2-வது செஷன் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்திருந்தது.

துருவ் ஜுரெல் 95 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன்கள் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஜுரெல் தனது சதத்தை பதிவு செய்ய 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

2-வது டெஸ்ட் சதம்

ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரெல், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2-வது சதத்தை எட்டினார்.

தற்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 489 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜுரெல் 106 ரன்களுடனும், பிரசித் கிருஷ்ணா ரன்கள் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com