ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் விலகல்

தென் ஆப்பிரிக்க அணியை வியான் முல்டர் வழிநடத்துவார் எனவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Image Courtesy: @ProteasMenCSA
Image Courtesy: @ProteasMenCSA
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 328 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் சீனியர் வீரர்கள் இடம் பெறவில்லை. இந்த அணியை கேசவ் மகராஜ் வழிநடத்துகிறார்.இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டியில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து கேசவ் மகராஜ் விலகி உள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முதல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக சீனுரான் முத்துசாமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 2வது போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியை வியான் முல்டர் வழிநடத்துவார் எனவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com