2வது டெஸ்ட் போட்டி; நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்..!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
Image Courtesy: @ICC 
Image Courtesy: @ICC 
Published on

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்க உள்ளது. இந்த தொடரை சமன் செய்ய வேண்டுமானால் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் நியூசிலாந்து அணி ஆட உள்ளது.

அதேவேளையில் கடந்த ஆட்டத்தைபோல் இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வங்காளதேசம் உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுவதால் நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா அல்லது மிட்செல் சான்ட்னெர் ஆகியோரில் ஒருவரை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com