2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

கேப்டவுன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள்: கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், ரியன் ரிக்கல்டான், வியான் முல்டர், ஸ்டப்ஸ், பவுமா (கேப்டன்), பெடிங்காம், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், கேஷவ் மகராஜ், ரபடா, குவேனா மபகா

பாகிஸ்தான்: ஷான் மசூத் (கேப்டன்), சைம் அயுப், பாபர் அசாம், கம்ரான் குலாம், சாத் ஷகீல், ரிஸ்வான், சல்மான் ஆகா, ஆமீர் ஜமால், மிர் ஹம்சா, குர்ரம் ஷாசாத், முகமது அப்பாஸ்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com