டி20 உலகக் கோப்பை - ரபாடாவின் உலக சாதனையை உடைத்த பாகிஸ்தான் வீரர்

பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை - ரபாடாவின் உலக சாதனையை உடைத்த பாகிஸ்தான் வீரர்
Published on

சென்னை,

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் (முதல் 1–6 ஓவர்கள்) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

நேற்று இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியின்போது அவர் இந்த சாதனையை எட்டினார். பவர்பிளேயில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, முன்பு தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 16 விக்கெட்டுகளை வீழ்த்தி வைத்திருந்த சாதனையை உடைத்து முதலிடம் பிடித்துள்ளார்

இருப்பினும் இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதனால் அரை இறுதிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தான் ஒரு புள்ளி மட்டுமே பெற்றது.

Also Read
பாகிஸ்தான்-இங்கிலாந்து போட்டியில் மோதிக்கொண்ட ரசிகர்கள் - வீடியோ வைரல்
டி20 உலகக் கோப்பை - ரபாடாவின் உலக சாதனையை உடைத்த பாகிஸ்தான் வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான இந்த தோல்வியால் அவர்கள் அதே புள்ளியில் நிலைத்துள்ளனர். இனி இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியை வெல்வதுடன், பிற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைய வேண்டும் என்ற கட்டாய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com