பாகிஸ்தான்-இங்கிலாந்து போட்டியில் மோதிக்கொண்ட ரசிகர்கள் - வீடியோ வைரல்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதின.
பாகிஸ்தான்-இங்கிலாந்து போட்டியில் மோதிக்கொண்ட ரசிகர்கள் - வீடியோ வைரல்
Published on

சென்னை,

நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் - இங்கிலாந்து ஆட்டத்தின்போது மைதானத்தில் ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.1 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதற்கிடையில், இப்போட்டியின்போது மைதானத்தில் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ரசிகர் ஒருவரும் இங்கிலாந்து ரசிகர் ஒருவரும் தகராறில் ஈடுபட்டனர். நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து சில இலங்கை ரசிகர்கள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read
இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்... அணியிலிருந்து வெளியேறிய அதிரடி வீரர் - என்ன காரணம்?
பாகிஸ்தான்-இங்கிலாந்து போட்டியில் மோதிக்கொண்ட ரசிகர்கள் - வீடியோ வைரல்

முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தான் ஒரு புள்ளி மட்டுமே பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த தோல்வியால் அவர்கள் அதே புள்ளியில் நிலைத்துள்ளனர். இனி இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியை வெல்வதுடன், பிற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைய வேண்டும் என்ற கட்டாய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com