

பெங்களூரு,
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு நட்சத்திர வீரர் விராட் கோலி 4 சிக்சர் உள்பட 81 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அத்துடன் ஐ.பி.எல். போட்டிகளில் அவர் 300 சிக்சரையும் (274 ஆட்டத்தில் 303 சிக்சர்) கடந்தார். ஐ.பி.எல்.-ல் இந்த மைல்கல்லை எட்டிய 3-வது வீரர் ஆவார். முதல் இரு இடங்களில் கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்), ரோகித் சர்மா (310) உள்ளனர். 4 மற்றும் 5-வது இடங்கள் முறையே தோனி மற்றும் டி வில்லியர்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.