சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 31 வயதான பாக்.வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு

இவர் பாகிஸ்தான் அணிக்காக 34 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 31 வயதான பாக்.வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு
Published on

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உஸ்மான் ஷின்வாரி (வயது 31) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென இன்று அறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் 34 போட்டிகளில் ஆடியுள்ளார்.

அதில் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளும், 16 டி20 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒரே ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக 2013-ம் ஆண்டு அறிமுகம் ஆனாலும் நிலையான வாய்ப்பு கிடைக்காமல் போராடினார். டி20 வடிவத்தில் அறிமுகம் ஆன அவருக்கு 2017-ம் ஆண்டில்தான் ஒருநாள் போட்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது 2-வது ஒருநாள் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆனாலும் அவரால் பாகிஸ்தான் அணியின் முதன்மை பந்துவீச்சாளராக வரமுடியவில்லை.

ஷின்வாரி கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஆடினார். அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை. 6 வருடங்கள் காத்திருந்த அவர் இனி அணியில் வாய்ப்பு கிடைக்காது என்ற முடிவில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com