3வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்ப்பு

3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
3வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்ப்பு
Published on

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங் கேற்றுள்ளது. இதில் தர்மசாலா, லக்னோவில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.

இந்த நிலையில், 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். உடல்தகுதியை நிரூபித்ததால் அவர் இந்தியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com